தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கல்லிடைக்குறிச்சி கோட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம்.


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் கல்லிடைக்குறிச்சியில் வைத்து இன்று 26.04.2022 நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் திரு S. ராஜன் ராஜ் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் கல்லிடைக்குறிச்சி அவர்களுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடித்துக்கொண்டு சேரன்மாதேவி பிரிவு அலுவலகத்தில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு நடத்தப்பட்டது இதில் மேற்பார்வை மின் பொறியாளர் உயர்திரு S. ராஜன் ராஜ் அவர்கள் கலந்துகொண்டு பணியாளர்கள் பணி நேரத்தில் பாதுகாப்புடன் பணி செய்வது எப்படி என அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் கல்லிடைக்குறிச்சி திரு.சுடலையாடும் பெருமாள் உதவி செயற்பொறியாளர்கள் திரு. மகேஷ்சுவாமிநாதன் திரு. திருசங்கர் உதவி மின் பொறியாளர் திரு.கைலாச மூர்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்