top of page

கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேற்பார்வை மின் பொறியாளர்..


விவசாய மின் இணைப்பில் அதிகபட்சமாக கிராமப்புற கோட்டம் 808 வழங்கியதற்கு கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு முத்தரசு அவர்களுக்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் உயர்திரு S. ராஜன் ராஜ் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேற்பார்வை மின் பொறியாளர்..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 23.09. 2021 அன்று ஒரு லட்சம் தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது அதன் பயனாக தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று ஒரு லட்சம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கி நிறைவு பெற்றது.


அதில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் 3423 விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. இதில் விவசாயிகள் வழங்கிய விண்ணப்பத்தின் அடிப்படையில் திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் 21 தென்காசி கோட்டம் 740 சங்கரன்கோவில் கோட்டம் 540 கல்லிடைக்குறிச்சி கோட்டம் 227 வள்ளியூர் கோட்டம் 650

கடையநல்லூர் கோட்டம் 437 அதிகபட்சமாக கிராமப்புற கோட்டம் 808 விவசாய மின் இணைப்புகள் வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


கிராமப்புற கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்.


08.04. 2022 அன்று கிராமப்புற கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் மேற்பார்வை மின் பொறியாளர் உயர்திரு S. ராஜன் ராஜ் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி தியாகராஜநகர் கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு மேற்பார்வை மின் பொறியாளர் அவர்கள் உத்தரவிட்டார்.


மக்கள் குறை தீர்க்கும் முகாம் நிறைவு பெற்றவுடன் விவசாய மின் இணைப்பில் அதிகபட்சமாக கிராமப்புற கோட்டம் 808 வழங்கியதற்கு கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு முத்தரசு அவர்களுக்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் உயர்திரு S. ராஜன் ராஜ் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கிராமபுற கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் உதவி மின் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

79 views0 comments
bottom of page