திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் இலக்கை தாண்டி 3283 வது இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது...




தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 23.09. 2021 அன்று ஒரு லட்சம் தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது அதன் பயனாக தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அதில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு விவசாய மின் இணைப்பு 1283 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது தற்பொழுது திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் இலக்கை தாண்டி 26.03.2022 இன்று 3283 விவசாய மின் இணைப்பு கடையநல்லூர் கோட்டம் கடையநல்லூர் தாலுகா கடையலுருட்டி கிராம் திரு த.மாரியப்பன் த/பெ.தங்கதுரை அவர்களுக்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் உயர்திரு எஸ்.ராஜன் ராஜ் அவர்களால் வழங்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது இந்நிகழ்வில் திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ( பொது )திரு. ந. வெங்கடேஷ் மணி கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் திரு. நாகராஜன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உதவி மின் பொறியாளர்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர் இதன் முலம் 2003 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை இலவச மின்சார திட்டத்திற்க்கு பதிவு காத்திருந்த தகுதியுள்ள அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது மேலும் இன்றுடன் மொத்தம் 3334 விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்