தென்காசியில் கிராமம் கிராமமாக ஒலி பெருக்கி மூலம் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு பிரச்சாரம்...


தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக 14.12.21 முதல் 20.12.21 வரை மின்சார சிக்கன வாரம் நடைபெற்று வருகிறது.
அதன் அங்கமாக தென்காசி கோட்டம், செங்கோட்டை உபகோட்டதிற்க்கு உட்பட்ட செங்கோட்டை நகர்புறம், செங்கோட்டை கிராமபுறம், வடகரை, ஆய்க்குடி, தென்காசி கிராமபுறம் ஆகிய பகுதியில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்துதல் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்வதை செங்கோட்டை உபகோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தென்காசி கோட்டத்தின் செயற்பொறியாளர் உயர்திரு. B. கற்பக விநாயக சுந்தரம் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு செங்கோட்டை உபகோட்ட பொறியாளர் திரு.G.குத்தலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். செங்கோட்டை, நகர்புறம் உதவிமின் பொறியாளர் திரு.A.ஜெயின் லாதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் . நன்றியுரையை ஆய்க்குடி உதவி மின் பொறியாளர் திரு.R. முஹம்மது உசேன், அவர்கள் வழங்கினார் .இந்நிகழ்ச்சியில் மின் பொறியாளர்கள் திரு.T.சுப்பிரமணியன், A.இஸ்மாயில், S. முருகன், R. முப்பிடாதி, M.மீராம்மாள் மற்றும் களபணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.