திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்...
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.







*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் இரண்டாவது புதன் மற்றும் நான்காவது புதன் கிழமைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள் அறிவித்திருந்தார்.*
*இதன் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (22.06.2022) நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள், நேரில் சந்தித்து மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி மனுக்களின் தன்மையை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு மேற்படி மனுமீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் மேற்படி மனுக்கள் விசாரணையை 3 நாட்களுக்குள் முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.*