74 வது குடியரசு தின விழா காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பாளை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது...
74 வது குடியரசு தின விழா காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பாளை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.
74 ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ. உ .சி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் *திரு. விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள்,* நெல்லை மாநகர காவல் ஆணையாளர் *திரு. இராஜேந்திரன், இ.கா.ப.* அவர்கள், *திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ்குமார், இ.கா.ப* அவர்கள், *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ப.சரவணன் இ.கா.ப., அவர்கள்,* மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் திரு. விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்து வழிநடத்தி வந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.*
இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்த 58 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்த 36 காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.