top of page

திருநெல்வேலி மருத்துவக்‌ கல்லூரி மாணவர்களின்‌ குருதிக்கொடை முகாம்‌...




திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின்‌.

ரத்தக்‌ கொடையாளர்‌ சங்கம்‌ சார்பாக மருத்துவக்‌ கல்லூரி மாணவர்களின்‌

குருதிக்கொடை முகாம்‌ நடைபெற்றது.


இந்த முகாமை திருநெல்வேலி

அரசு மருத்துவக்கல்லூரியின்‌ முதல்வர்‌ மரு. திருமதி. ரேவதி அவர்கள்‌

துவக்கி வைத்தார்‌. இரத்த தான முகாம்‌ ஏற்பாட்டை இரத்த வங்கி

பேராசிரியர்‌ மரு. மணிமாலா அவர்களும்‌ பயிற்சி மருத்துவ மாணவர்களும்‌

சிறப்பாக செய்திருந்தனர்‌.


நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய கல்லூரிமுதல்வர்‌

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியின்‌ குருதியேற்றுத்‌ துறையில்‌

செயல்படும்‌ இரத்த வங்கியில்‌ கடந்த ௨௦௨௨ ம்‌ ஆண்டில்‌ முதல்முறையாக

10,000 இரத்த அலகுகளுக்கு மேல்‌ சேகரிக்கப்பட்டு, ஏறக்குறைய 22 000.

இரத்தக்கூறுகள்‌ மருத்துவ மனையில்‌ சிகிச்சை பெரும்‌ ஏழை எளிய

மக்களுக்கு அளிக்கப்பட்டது. சிறப்பு சிகிச்சை முறையான ஏபெரிசிஸ்‌

(Apheriesis) முறையில்‌ இரத்ததட்டணுக்கள்‌' பெறப்பட்டு

கர்ப்பிணிப் பெண்களின்‌ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும்‌ நரம்பு

சம்பந்தமான நோய்களுக்கும்‌ எலிமருந்து விஷத்தினால்‌ உண்டாகும்‌

கல்லீரல்‌ பாதிப்பிற்கும்‌ பிளாஸ்மா மாற்று சிகிச்சை சிறப்பாக நடைபெற்று

வருகிறது.


கல்லூரியின்‌ இரத்தக்கொடையாளர்‌ சங்கம்‌ சார்பாக ஒவ்வொரு

ஆண்டும்‌ மருத்துவ மாணவர்கள்‌ இரத்த: தான முகாம்‌ நடத்தி

நோயாளிகளுக்கு உதவி புரிகிறார்கள்‌ என்று தெரிவித்தார்‌.


இந்த இரத்த தான முகாமில்‌

உதவி முதல்வர்‌ மரு.சுரேஷ்‌துரை

அவர்கள்‌,

மருதத்துவ கண்காணிப்பாளர்‌ மரு. பாலசுப்ரமணியன்‌ அவர்கள்‌.

நிலைய மருத்துவ அலுவலர்‌ மரு.ஷ்யாம்‌. சுந்தர்‌ அவர்கள்‌, ஏனைய

துறைகளின்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ கலந்து கொண்டும்‌

இரத்த தானம்‌ செய்தும்‌. சிறப்பித்தனர்‌. இந்த விழாவினை சிறப்பாக

ஒருங்கிணைத்து பணியாற்றிய இரத்த வங்கி குழுவினருக்கு உதவிப்‌

பேராசிரியர்‌ மரு.ரவிசங்கர்‌ அவர்கள்‌ நன்றி தெரிவித்தார்‌.


29 views0 comments
bottom of page