திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.









தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அசச்சுருத்தல் உள்ள நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
பொதுஇடங்களில் தனிநபர் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், வணிகநிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் பணியாற்றவேண்டும் மேலும் வணிகநிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் வணிகநிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.