top of page

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் குடியிருப்பு பகுதியில் உடல்நல பூங்கா....

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் குடியிருப்பு பகுதியில் உடல்நல பூங்காவை (Health Park) திறந்து வைத்தார் தென் மண்டல காவல்துறை தலைவர்...







தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க், இ.கா.ப.., அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் குடியிருப்பு பகுதியில் புதியதாக சீரமைக்கப்பட்டுள்ள உடல்நல பூங்காவை (Health Park) திறந்து வைத்து காவலர்களின் குடும்பத்தாரிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார். மேற்படி பூங்காவில் நடைப்பயிற்சி தளம், எட்டு வடிவ நடைப்பயிற்சி தளம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒளிரும் விளக்குகள் அடங்கிய உடல் நல பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியையும் அங்கிருந்த காலர்களின் குழந்தைகளினால் திறந்து வைக்கப்பட்டது.


அப்போது‌ திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.

14 views0 comments
bottom of page