top of page

ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டுக்கொடுத்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.



திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார்நகரை சேர்ந்த *செல்லத்துரை* என்பவர் இணையதளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ரூ.3 இலட்சம் பணத்தை இணையதளம் மூலமாக செலுத்தி பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை பணத்தை மீட்டுத்தருமாறு *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,* அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி *மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன்* அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் *சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக செல்லத்துரை என்பவருடைய ரூபாய் 2 இலட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப.,* அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம் 22.06.2022 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

*இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.*

8 views0 comments
bottom of page