திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மானூர் காவல் துறையினர்.


திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இரவு மற்றும் பகல் நேரங்களில் பக்தர்கள் சாலையில் பாதயாத்திரையாக செல்வார்கள். அவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்கதர்களின் பாதுகாப்பு கருதி சாலைகளில் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தும்படியும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பசரவணன், இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல்துறையினர்க்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி திருநெல்வேலி சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவி ஆய்வாளர் திரு.முனியசாமி அவர்கள், சாலை பாதுகாப்பு குறித்தும் மேலும் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதவி ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சாலைகளில் செல்லும்போது சாலை ஓரத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டாம் எனவும் பாதுகாப்பான இடங்களில் ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கினார்.