top of page

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது - 131 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது. மேலும் எதிரியிடமிருந்து சுமார் 48 லட்சம் மதிப்பிலான 131 சவரன் தங்க நகைகள் பறிமுதல்...



அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்ணைசங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த 14-07-2022ம் தேதி இரவு நகைகள் திருடு போனது சம்பந்தமாகவும், 31-10-2022 ஆம் தேதி சின்னசங்கரன்கோவில் ரோடு சுப்பிரமணியபுரம் பொத்தை ருபினாபர்வீன் என்பவரது வீட்டில் நகைகள் திருடு போனது சம்பந்தமாகவும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து திருட்டுபோன நகைகளை மீட்க வேண்டி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. D. பல்வீர் சிங் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு.S.சந்திரமோகன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து ஆய்வாளர் பல்வேறு இடங்களில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் *கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் போஸ்ட், முகிலன் குடியிருப்பு, ரெட்ட போஸ்ட் தெருவை சேர்ந்த அய்யாபழம் மகன் சுடலைபழம் வயது 44* என்ற ஒரே நபர்தான் மேற்படி 2 இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது என கண்டறியப்பட்டது.

மேலும் மேற்படி எதிரி சுடலைபழம் கடந்த ஒரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்ததுள்ளது. மேற்படி எதிரியை கண்டுபிடிக்க தனிப்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேடி வந்த நிலையில் எதிரி சுடலைபழம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் சுற்றிவருவதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று 22.11.2022ம் தேதி காலை தனிபடையினரால் கைது செய்யப்பட்டார். மேற்படி எதிரியிடமிருந்து ரூ.48,00,000/- மதிப்புள்ள சுமார் 131 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்படி எதிரி வள்ளியூர், நாங்குநேரி, மானூர் போன்ற பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேற்படி எதிரி சுடலைபழத்தை விசாரணைக்கு பின்னர் இன்று கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அம்பாசமுத்திரம் அவர்கள் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார். மேற்படி எதிரிக்கு கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது சுமார் 45 க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

50 views0 comments
bottom of page