ஆபத்துகாலத்தில் அதிவிரைவாக செயல்படும் “தீ” செயலி அறிமுகம்







தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டுள்ள தீ என்ற செயலியின் நன்மைகளும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் முறைகள் பற்றி தமிழ்நாடு தீயணைப்பு துறையின் இயக்குனர் திரு சைலேந்திரபாபு அவர்களது உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட அலுவலர் சத்திய குமார் உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் பணியாளர்களால் பொது மக்களுக்கு விளக்கி காண்பிக்கப்பட்டது "தீ" என்ற செயலி என்பது அவசர அழைப்பு காலங்களில் பொதுமக்கள் தீயணைப்பு துறை உதவியை கோரும் வண்ணம் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். மேலும் தீ விபத்து மற்றும் உயிர் மீட்பு அழைப்புகளில் மேலும் அதி விரைவாக வந்துதீயணைப்பு மற்றும் உயிர் மீட்பு அழைப்புப் பணியை மேற்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீ செயலியை கூகுள் "ப்ளே ஸ்டோரில்" பதிவிறக்கம் செய்த பின்னர் அதில் "ஹெல்ப்" அல்லது "உதவி" என்ற பொத்தானை அழுத்தியவுடன் உதவி கோரும் நபரின் இருப்பிடம் கூகுள் வரைபடம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கைபேசியில் தெரிந்து விடும். உடனடியாக தீயணைப்புத் துறையினரால் அழைப்பு பெறப்பட்ட நபரின் முகவரியை எளிதாக கண்டறிந்து அவருக்கு தீயணைப்புத் துறையின் சேவையை உடனடியாக பெற வழிவகை செய்யும். மேலும் இடர் ஏற்படும் காலங்களில் தனிமையில் உள்ள பெண்கள் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றோர் உடனடியாக தீயணைப்பு துறையின் சேவையை பெற எளிதாக இருக்கும். மேலும் உதவி அழைப்பு வரும் நபர் எந்த இடத்திலிருந்து அழைப்பு கூறுகிறாரோ அதன் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக அவரது உதவி அழைப்பு பெறப்படும். எனவே தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்ட இந்த "தீ" செயலியை தமிழகம் முழுமைக்கும் பொதுமக்கள் மத்தியில்" தீ" செயலி விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டு வருகிறது.