கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..

தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட ராஜவல்லிபுரம், மறவர் காலனி, வடக்கு தெருவை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் *லெட்சுமணன் (23)* என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக *தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகரன் அவர்கள்* கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப.,* அவர்கள் பரிந்துரையின் படி, *மாவட்ட ஆட்சித் தலைவர்* அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் 16.11.2022 இன்று அடைக்கப்பட்டார்.