மேலப்பாளையம் தாய் நகர் நல்வாழ்வுச் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...
மேலப்பாளையம் தாய் நகர் நல்வாழ்வுச் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.




விழாவிற்கு தாய் நகர் நல்வாழ்வு சங்க தலைவர் முத்து மணி தலைமை தாங்கினார்.
51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சகாய ஜூலியட் மேரி முன்னிலை வகித்தார்.
தாய் நகர் மகளிர் குழுத் தலைவி சீத்தா ருக்மணி வரவேற்றார்.
சமத்துவ பொங்கல் விழாவினை மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா துவக்கி வைத்தார்.
நெல்லை புறநகர் ரோட்டரி சங்க புரவலர் டாக்டர் பிரேமச்சந்திரன், அருள் திரு. அகஸ்டின், தாய் நகர் மஸ்ஜிதுர் ரஹீம் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பென்மேன் பி.எஸ். முஹம்மது இப்ராஹீம் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கே. சுடலைக்கண்ணு மற்றும் தாய் நகர் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தாய் நகர் நல்வாழ்வு சங்க பொருளாளர் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை தாய் நகர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.