கொத்தனாரை கொலை செய்த பெண் உட்பட 3 பேர் கைது.

தென்காசி மாவட்டம் தென்காசி மங்கம்மா சாலை அருகே தனியார் தேக்கு தோட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செந்தூர்பாண்டி தென்காசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் இறந்தவரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி சிவகலா என்பவர் திருநெல்வேலி மாவட்டம் பெருமாள் புரம் காவல் நிலையத்தில் எனது கணவரை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரை அழைத்து அடையாளம் காட்டியதில் இறந்தவர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பதும் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் காவல்துறையினர் கண்ணனின் செல்போன் என்னை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இறுதியாக இரண்டு நபர்கள் அவரிடம் தொலைபேசியில் தொடர்ந்து பேசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அடைய கருங்குளம் பகுதி சார்ந்த குமார் என்பவரது மனைவி முத்து வடிவு (29) என்பதும் இவர் பாலியல் தொழில் ஈடுபடுபவர் என்பதும் தெரிய வந்தது.
காவல்துறையின் மேலதிக விசாரணையில் முத்து வடிவும் கண்ணனும் கடந்த மூன்றாம் தேதி திருநெல்வேலியில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு குற்றாலம் குளிக்க இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது முத்து வடிவு அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, கருமடையூரைச் சேர்ந்த ஐயப்பன் சுரேஷ் ஆகிய இருவரையும் அழைத்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து தென்காசி மங்கம்மா சாலை பகுதியில் உள்ள தனியார் தேக்கு தோப்பிற்கு சென்றுள்ளனர். அப்போது கண்ணிடமிருந்து பணம் செல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தூண்டால் கழுத்தில் இறுக்கி கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் அருகில் உள்ள புதர் அருகே கண்ணனின் உடலை போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து தென்காசி காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகணம், மோதிரம், மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த 7 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த தென்காசி காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.