தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு....


தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு,நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி ,மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் ,குறிப்பாக தென்ன்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள் ,
பயிற்சி மருத்துவர்கள் என சுமார் 107 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, ,துணை இயக்குனர் சுகாதாரம் மருத்துவ முரளி சங்கர், துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர் இராமநாதன் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினார்கள். Iகருத்தரங்கில் மருத்துவர் அகத்தியன், மருத்துவர் மல்லிகா,மருத்துவர் மாரிமுத்து, மருத்துவர் கார்த்திகேயன் , மருத்துவர் ராஜலட்சுமி, மருத்துவர் சாரதாதேவி நீரிழிவு நோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (DMS wing)மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள், அனைத்து பேச்சாளர்களையும் கலந்துகொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (DPH)மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்துகொண்டு சிறப்பித்தார் . கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினர். உறைவிட மருத்துவர் எஸ்எஸ் ராஜேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை// நிர்வாகத்திற்கும் ,அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய மருத்துவர் விஜயகுமர், மருத்துவர் மல்லிகா, மருத்துவர் கார்த்திக் அவர்களுக்கும், பேச்சாளர்கள் அனைவருக்கும், கலந்து கொண்ட மருத்துவர்கள, QPMS பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக் கொண்டார் ..