தென்காசி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.02.2021) நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனி நபர் கடன், விதவை உதவித்தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 310 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்களை தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து, வருவாய்த்துறை மூலம் ஆதரவற்ற விதவை சான்றுகள் 4 நபர்களுக்கும், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவில் சிவகிரி வட்டம், புளியங்குடியை சேர்ந்த காந்திராஜன் என்பவர் 06.08.2020 அன்று உயிரிழந்தததையொட்டி, அவரது பெற்றோர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிவாரண உதவிதொகை ரூ.3,00,000 க்கான காசோலையினை
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.ஜனனி சவுந்தர்யா, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.வியஜ லட்சுமி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கவிதா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் (பொ)திருமதி.ஷீலா, ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாலாஜி, அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.