வழிபாட்டுத்தலங்களை திறந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்வதற்கு அனுமதி தர கோரிக்கை

ஸ்ரீ காளிகாம்பாள் பீடத்தைச்சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா நாராயண தீர்த்தர் அவர்கள் நெல்லைக்கு வருகைதந்தார். நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர்.
பாரதத்தை மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுவதையும் சீன தேசத்திலிருந்து வந்த கொரோனா என்னும் வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.பல நாடுகளும் , பல நாட்டு அரசாங்கமும் இந்த கொரோனா வைரஸ் என்னும் நுண்கிருமியை அழிக்க பாடுபட்டு வருகிறது.நமது மத்திய, மாநில அரசுகள் கடந்த மூன்று மாத காலமாக இந்த கொரோனா வைரஸை அழிப்பதற்காக முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை அளிப்பதில்லை. எனவே அது சமூக தொற்றாக மாறிக்கொண்டு வருகிறது. சென்னை, மும்பை போன்ற பல மாநகரங்களில் மக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதனால் இந்நோய் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. மூன்று மாத காலமாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் மக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலமாக ஆன்மிகம் என்னும் பலமான சக்தி மக்களிடம் இல்லாமல் மக்கள் மனம் தளர்ந்து இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் அரசின் திட்டத்திற்கு உட்பட்டு வழிபாட்டுத்தலங்களை திறந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்வதற்கு உடனடியாக அனுமதி தரவேண்டும். கொரோனா வைரஸை அழிப்பதற்கு ஊரடங்கு மட்டும் தீர்வாக இருக்க முடியாது. இடம்பெயரும் தொழிலளர்களுக்கு சரியான வசதிகள் செய்து தராமல் இருப்பதால் அவர்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்பட்டு இந்த வைரஸ் தொற்றும் அதிமாக பரவி வருகிறது. விஞ்ஞானிகளும் விரைவிலையே மருந்தை கண்டுபிடித்து நோயை அழிக்க வேண்டும்.
சமீபகாலமாக நுண்கிருமிகள் மட்டுமல்லாமல் புயல்களாலும் சேதங்கள் உண்டாகி வருகின்றன. இவை எல்லாம் கலிகாலத்தில் நடக்கூடிய ஒன்று. ஆனால் இவற்றை அழிப்பதற்கு மக்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை மூட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனாவிடமிருந்தும், மது அரக்கர்களிடம் இருந்தும் மக்களை காப்பாற்ற வேண்டும். அரசாங்கமும் கொரோனாவை அழிக்க கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பைத் தந்து சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும்,.கொரோனா மற்றும் மது அரக்கன் இவற்றில் இருந்து விரைவில் விடுதலை பெறவேண்டும் என்று அவர் தெரிவித்தார்..
News sponser : https://lapureherbals.in/
