கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தேசிய ஆசிரியர் தினவிழா நாடார் நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் வ.உ.சிதம்பரனார் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் வெற்றியை கொண்டாடவும் மாணவர்களின் வளர்ச்சிக்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க செயலாளரும் பள்ளிச் செயலாளருமான கண்ணன், பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை செல்வி வரவேற்றார். சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் சேர்மன் முத்துமுருகன், ஆசிரியர்கள் அருள்காந்தராஜ், ஜெபஅகிலா, வசந்தி, ஜெபலதா, சகாயகலாவதி, தனலட்சுமி, ஜெயஜீவா, செல்வராணி, ஜான்ஜெபராஜ், ராதாகிருஷ்ணன், ஷைலஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை மீனா நன்றி கூறினார்.




