டீக்கடையில் பார்சல் மட்டுமே அனுமதி - சாத்தியமாகுமா இந்த உத்தரவு...







கொரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு போடப்பட்டதையடுத்து தமிழகத்தில் டீ கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது 144 தடை உத்தரவை தளர்த்தி 34 வகையான கடைகள் இன்றுமுதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் டீ கடைகள் திறக்கலாம் என்றும் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு டீ பார்சல்கள் மட்டுமே வழங்கவேண்டும் என்று நிபந்தனை. ஆனால் டீக்கடையில் நின்று டீ குடிக்ககூடாது மீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று உத்தரவு. வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள் களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெற ரு டீ குடித்துவிட்டு தங்களது வேலையையோ அல்லது பயணத்தையோ தொடர்வது வழக்கம். ஆனால் எவ்வாறு பார்சல் வாங்கிச்செல்வது என்றும், பார்சல் டீ எப்படி வழங்குவது? வாடிக்கையாளர்கள் எங்கே சென்று டீ குடிப்பது என்று குழப்பமான சூழ்நிலை உள்ளதால் நெல்லையில் பெரும்பாலான டீக்கடைகள் இன்று திறக்கப்படவில்லை. அப்படியும் திறக்கப்பட்டுள்ள கடைகளில் பார்சல் டீ உத்தரவு காற்றில் பறக்கிறது.