10 கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக நின்று டீ குடித்த டீ கடைக்கு சீல் வைக்க பட்டது.



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் தடை உத்தரவை மீறி பாளையங்கோட்டை St. தாமஸ் சாலை பகுதியில் 10 கும் மேற்பட்டவர்களுக்கு டீ வழங்கி வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் st. தாமஸ் சாலையில் செயல்பட்டு வந்த தேனீர் கடைக்கு மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் அவர்களின் உத்தரவு படி மாநகராட்சி உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆலோசனை படி சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன், பெருமாள், மேற்பார்வையாளர்கள்பழனி, முருகன், ஆறுமுகம் தூய்மை இந்தியா பணியாளர்கள் கனகப்ரியா, காமராஜ் மற்றும் பணியாளர்கள் சம்பத், சேகர், இசக்கி மற்றும் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாயாண்டி, சுந்தர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்க பட்டது.