top of page

கழுகுமலை அருகே நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முகாம்...







தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கழுகுமலை அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சமுதாய நலக்கூட்டத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது காசநோய் பணியாளர்கள்வீடு வீடாக சென்று சென்று காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டதுசர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது பின்னர் சளி பரிசோதனைக்கு தகுதியான நபர்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக இரண்டாம் கட்டமாக மீண்டும் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது

பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து பொது சுகாதாரம் பற்றியும் பொதுமக்கள் அன்றாட வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார பழக்கவழக்கங்கள் தெளிவாக எடுத்துக்கூறினார்

கடம்பூர் காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் காசநோய் அறிகுறிகள் பற்றியும் சளிப்பரிசோதனை செய்வதன் அவசியம் பற்றி கூறினார்

சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா , சுகாதார ஆய்வாளர் கார்த்திக் இடைநிலை சுகாதார பணியாளர்கள் தண லட்சுமி , பரணி, மற்றும் உஷா,சத்யகலா ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

19 views0 comments
bottom of page