நெல்லையின் சுவையான காபி - நெகிழ்ச்சி சம்பவம்.


நெல்லையில் பீடி சுற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்து நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் தவசியம்மாளின் வாழ்க்கை வலி நிறைந்ததாக இருந்தது.
கணவரை இழந்த தவசியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள் , பள்ளிப்படிப்பு படிக்கின்றனர்.
பீடி சுற்றும் தொழில் இல்லாததால் வறுமை . குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன என செய்தியாளர் கேட்டபோது பால் காபி குடிக்கனும் போல இருக்கு என்று கூறியபோது கண் கலங்கி விட்டது.
நெல்லை சமூக ஆர்வலர் மகேஷ் மூலமாக அந்த குடும்பத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் ( காபி பவுடர் உட்பட ) இன்று கொடுக்கப்பட்டது.
அவர்களுடன் காபி அருந்தும்படி கூறினேன். இன்று நெல்லையின் சுவையான காபி இதுவாக தான் இருக்கும்.
நன்றி- மகேஷ் , அன்னை தெரசா அறக்கட்டளை .
நாகராஜன் , செய்தியாளர் புதியதலைமுறை.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்