நெல்லை மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு...





தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த 40 நாட்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்பொழுது ஊரடங்கு தளர்த்தப்பட்டநிலையில் இன்று 07.05.2020 காலை 10 மணிக்கு தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதிக்கப்பட்டதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 94 மதுபான கடைகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் அவர்கள் அனைவருக்கும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பணிகள் மேற்கொள்வார்கள் மேலும் தமிழக அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளின்படி இன்று திறக்கப்படுகிறது.
மதுக்கடைகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில் மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு:
50-வயதிற்கு மேல் - 10.00 AM to 01.00 PM
40-50 வயதிற்குள் - 01.00 PM to 03.00 PM
40- வயதிற்குள் - 03.00 PM to 05.00 PM
நெல்லை மாநகரப் பகுதிகளில் மது வாங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வழங்கப்பட்டுள்ள வண்ண அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே மது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறை சார்பில் மது வாங்க வரும் ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும் என்றும்,
2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது..