மதுபானக் கடையில் மது பாட்டில்களையும் சிசிடிவி கேமரா வின் DVRயும் எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்..




தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளான மருத்துவ பொருட்கள் மற்றும் காய்கறி பலசரக்கு கடைகள் மற்றும் திறந்திருக்க அரசு அனுமதித்த நிலையில் மதுபானக்கடைகள் ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பூட்டியே தான் உள்ளது. கிராமப்புற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் இருந்து மதுபான பாட்டில்களை போலீசார் எடுத்து திருமணமண்டபங்களில் பத்திரப்படுத்திய நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருந்தனர் இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் ஆறு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளையும் கண்காணிப்பு கேமரா சேமித்து வைக்கக்கூடிய டிவிஆர் யும் எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து மதுபான கடை முழுவதும் பாட்டில்கள் மற்றும் கதவுகள் சுவர்களில் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை எடுத்துள்ளனர் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சூப்பர்வைசர்களை கடைக்கு வரவழைத்து பாட்டில்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது எனவும் திருடு போனது பற்றியும் விசாரணை நடத்தினர் பரபரப்பான எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் சந்திப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது