காசநோயாளிகளுக்கு பண்டிகை காலங்களில் புத்தாடைகள் வழங்கிய ஹெக்சகான் நிறுவனத்திற்கு தமிழக அரசு விருது..
*



வல்லநாடு காசநோயாளிகளுக்கு பண்டிகை காலங்களில் புத்தாடைகள் வழங்கிய ஹெக்சகான் நிறுவனத்திற்கு தமிழக அரசு விருது வழங்கல்*
வல்லநாடு காசநோயாளிகளுக்கு தீபாவளி காலங்களில் புத்தாடைகள் வழங்கிய நிறுவனத்திற்கு தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையத்தில் வைத்து *(06.08.2022)* இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் *டாக்டர்.ஆல்பர் சேக்ரட் செல்வின்,* மாவட்ட நலக்கல்வியாளர் *திரு.தங்கவேல்* ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
தீர்வு முறை அமைப்பாளர் *திரு.குப்புசாமி* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் *மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்* அவர்களின் கையெழுத்திட்ட சான்றிதழை கீழசெக்காரக்குடி *ஹெக்சகான் நியூட்ரிஷன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்* நிறுவனத்திற்கு வழங்கி பேசுகையில், காசநோயளிகள் குணமடைய சிகிச்சை காலத்தில் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம். காசநோய் நோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தானியம், தினை மற்றும் பருப்பு வகைகள் தன்னார்வலர்களால் மூலம் வல்லநாடு காசநோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, காசநோயாளிகள் தீபாவளி பண்டிகையை மற்றவர்களைப் போல் சிறப்பாக கொண்டாட புத்தாடைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹெக்சகான் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
விருதினை நிறுவன ஆலையின் தலைமை அதிகாரி *திரு.சே.அ.கா.அப்துல் சுபான்* அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்ந நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் *திரு.சந்தான சங்கர் வேல்,* அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் *திரு.மோகன்,* டி.ஆர்.டி.பி. ஒருங்கிணைப்பாளர் *திரு.மாரியப்பன்* , சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் ஹெக்சகான் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.