பாளையங்கோட்டையில் சமூக இடைவெளி கடை பிடிக்காத சூப்பர்மார்க்கெட்க்கு சீல்...
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட திருவனந்தபுரம் சாலையில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடை பிடிக்காதது மற்றும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்ததாக கூறி பாளையங்கோட்டை மண்டல சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். வருகிற 28ம் தேதி வரை கடை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது...


