திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) உயர் திரு . சிவகுரு பிரபாகர் அவர்களின் மனித நேய பணி



நெல்லை அரசு சிற்ப்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று காலை (15.05.20) 9.00 மணியளவில் வீடு திரும்ப முடியாமல் வயது முதிர்ந்த இரண்டு கால்களும் ஊனமுற்ற திரு.சுப்பிரமணி அவரது மனைவி காளியம்மாள் இருவரும் நடக்க முடியாமல் மருத்துவமனை சாலையில் DIG இல்லம் அருகே வருவதை பார்த்த
நமது உதவி ஆட்சியர் உடனடியாக அவர்களை அழைத்து அவர்களுடைய ,விலாசத்தை விசாரித்து காலை உணவு வாங்கி கொடுத்து தன்னார்வலர்கள் இருவரை அழைத்து அவர்களது சொந்த ஊரான ஏர்வாடியில் உள்ள அவர்களது இல்லத்தில் உடனடியாக சேர்க்க வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்
உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்களின் மனித நேயபணி நெல்லை மாவட்ட மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம் ஆகும்.
உயர்திரு சிவகுரு பிரபாகரன் IAS அவர்களை நெஞ்சார வாழ்த்துவோமே