Stay Safe at Cyberspace -Cyber Security empowerment என்ற ஒரு நாள் கருத்தரங்கு.

இன்று (28-2-2019) திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற Stay Safe at Cyberspace -Cyber Security empowerment என்ற ஒரு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு “Cyber Safety” தலைப்பில் உரையாற்றினேன். எனது உரையின் முக்கிய அம்சம்:- 🎯 இணையம் தற்போது மனிதனின் இதயம் போல ஆகிவிட்டது . இணையம் இல்லாவிட்டால் இதயம் நின்றது போலாகிறோம். 🎯 இணையத்தில் எந்த ஒரு தகவலையும் , புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யும் முன் அது கட்டாயமா என யோசிக்கவும். உங்கள் அந்தரங்க தகவல்களையும் , புகைப்படத்தையும் சேமிக்க வேண்டிய இடம் இணையமல்ல. 🎯 ATM மோசடிகள் , ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள இக்காலத்தில் உங்களை பெற்றோர்களையும், உறவினர்களையும் விழிப்புணர்வு அடையச் செய்யவேண்டிய பொறுப்பு மாணவர்களுடையது. 🎯 சைபர் குற்றங்களில் பாதப்படைவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம் . 🎯 இணையத்தில் எப்போதும் நினைவு கொள்ள வேண்டியது மூன்று எழுத்துகள் . ABC- Always Be Careful. “ நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” #Cybersafety #Tirunelvelicity #Tnpolice என்றும் அன்புடன் ச. சரவணன் காவலர் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்