வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அதி வேகமாக வரும் வாகனங்களால் தொடர் விபத்து வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை .



திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள என்ஜிஓ காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மேற்குப் பக்கத்திலுள்ள நான்கு வழி சாலையில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் அதி வேகமாக வரும் வாகனங்களால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையில் வடபுறம் மற்றும் தென்புறம் ஆகிய இரண்டு பகுதியில் உள்ள சாலைகளில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மெயின்ரோட்டில் வரும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது .
இந்த பகுதியில் சாலை விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் இல்லையென்றால் குறைந்தபட்சம் மேலும் இரண்டு வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...