top of page

காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்...




திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் *திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப அவர்கள்* உத்தரவின் படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினர், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர் திருமதி. தழிழரசி ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தலைமையில் நடைபெற்றது.


இந்த சிறப்பு முகாம்

*திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன் இ.கா.ப.* அவர்களின் உத்தரவின் படி *கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு சுப்பாராஜூ* மற்றும் *சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சீமைச்சாமி அவர்கள்* தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் தொற்றியிருந்தது தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அனைவரும் தடுப்பூசியினை போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் *திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.*


இந்த சிறப்பு முகாமில் காவல் துறையினர்,காவல் துறையினரையினரின் குடும்பங்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

1 view0 comments
bottom of page