பிரதமரின் சொட்டுநீர் பாசன திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்...



திருநெல்வேலி மத்திய தகவல் தொடர்பு அலுவலகம் சார்பாக, பிரதமரின் சொட்டுநீர் பாசன திட்டம், ஜன் தன் வங்கி கணக்கு திட்டம், மலிவு விலை மக்கள் மருந்தகம், திறன் இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம், உலக மக்கள் தொகை தினம் மற்றும் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா பெருவிழா குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவல்கிணறு கிராமத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர், நுண்ணீர் பாசன திட்டம், திரு அசோக்குமார் தலைமை வகித்தார். அவர் பிரதமரின் சொட்டு நீர் பாசன திட்டம் மற்றும் இதர வேளாண் திட்டங்கள் குறித்து பேசி முன்னதாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.
திரு இருதய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை திருமதி ஆன்றோ வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, துணைத் தலைவர் சுயம்பு, வேளாண்மை அலுவலர் சாகுல் ஹமீது, மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன், வள்ளியூர் மக்கள் மருந்தகம் உரிமையாளர் ஜெஸ்ஸோ, நிதிசார் ஆலோசகர்கள் பார்த்திபன் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கள விளம்பர உதவியாளர் வேல்முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை நிகழ்த்தினார் ஊராட்சி செயலர் திரு பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பிளாஸ்டிக் கேரி பைகளைத் தவிர்க்க துணிப்பைகள் வழங்கப்பட்டது...