சிறப்பாக பணியாற்றிய மாவட்ட காவல்துறையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்




திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.
பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 30 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்புராஜூ, அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.