காவலர் நல உணவு விடுதியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.


காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவலர் நல உணவு விடுதியை திறந்து வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருநெல்வேலி மாவட்ட
காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நல உணவு விடுதி- யினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிசில் அவர்கள் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு. சந்திரசேகர்,மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் சாப்பிட வருபவர்கள் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்னரே அவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இத்தகைய செயல் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
News sponser : https://lapureherbals.in/
