திருநெல்வேலி மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், உயரதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்,. இ.கா.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிசில், ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி மற்றும் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் திரு கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.