ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.




*ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.*
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக அத்தியாவசிய பொருட்களை காவல்துறையினர் வழங்கி வருகிறார்கள்.
இன்று *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப* அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருந்து வந்த *வள்ளியூர் பகுதியில் உள்ள 103 ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும்,* கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவர்கள் *பாதுகாப்பு நலன் கருதி முகக் கவசங்கள் வழங்கினார்.*
மேலும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வெளியே செல்ல வேண்டாம் எனவும், நோய்த்தொற்று வருவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றி நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
பின்னர் *வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஹரி கிரண் பிரசாத் இ.கா.ப அவர்கள்* மற்றும் *பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள்* ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.