top of page

முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்






திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.நெ.மணிவண்ணன்.,* அவர்கள் உத்தரவுபடி சுழற்சி முறையில் காவலர்கள் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.


இந்நிலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் இரவு நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப* அவர்கள்., கோபாலசமுத்திரம் முன்னீர்பள்ளம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் காவலர்களுடன் பேசும்போது உரிய நேரத்தில் உணவு கிடைக்கிறதா என்று கேட்டறிந்தும், பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

14 views0 comments
bottom of page