தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடந்த திருமணம்...





கொரோனா நோய் தொற்றை தடுக்க இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தற்பொழுது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டநிலையில் திருமணங்களை சமூக இடைவெளி மற்றும் தகுந்த விழிப்புணர்வுடன் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பாலவிக்னேஷ்வரன் - பிரியங்கா திருமண விழாவில் சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விருந்துக்கான ஏற்பாடுகளிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. முககவசம் அணியாமல் வந்த நபர்குளுக்கு வரவேற்பில் முககவசம் வழங்கப்பட்டது...
News sponser : https://lapureherbals.in/
