top of page

SmartCop -- புதிய App





திருநெல்வேலி மாநகரத்தில்

கொரணா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மேலும் ஒரு முயற்சியாக SmartCop என்ற புதிய App அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலி.


🎯ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் இந்த செயலிமூலம், தேவையின்றி வெளியில் நடந்தோ, வாகனத்திலோ சுற்றுவோரின் விவரங்களை சேகரிக்க முடியும்.


🎯ஊரடங்கை மீறுவோரின் பெயர், கைபேசி எண், வாகன பதிவெண், ஓட்டுனர் உரிம எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் அல்லது ஏதாவதொரு அடையாள அட்டை எண் ஆகியவற்றை நிகழ்விடம் உள்பட உள்ளிட முடியும்.


🎯நிகழ்விட முகவரியை செயலி தானாகவே கைபேசியின் ஜிபிஎஸ் கருவியின் மூலமாக எடுத்துக்கொள்ளும்.


🎯பிடிபட்ட நபர், வாகனம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை செயலி மூலம் படம் எடுத்துக்கொள்ளலாம்.


🎯பிடிபட்ட நபரின் கைபேசி எண் அல்லது வாகன எண்ணை உள்ளிடும்போது செயலி முந்தைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து அவருடைய முந்தைய தவறுகளை பற்றி எச்சரிக்கை செய்யும்.


🎯முந்தைய தவறுகள் குறுகிய காலத்திற்கிடையில் நடைபெற்று இருப்பின், அவருக்கு அபராதமோ அல்லது வாகனத்தை பறிமுதல் செய்தோ நடவடிக்கை எடுக்க முடியும


🎯எடுக்கப்படும் நடவடிக்கையை, எச்சரித்தல், அபராதம் அல்லது வாகன பறிமுதல் என பதிவு செய்ய முடியும்.


🎯இந்த செயலி ஒருங்கிணைந்த டேட்டாபேஸ் மூலம் இயங்குவதால் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தவறுகளை ஒப்பிட்டு மாநகரம் முழுவதும் நடவடிக்கை எடுக்க முடியும்.


🎯மாநகரம். முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளையும், செயலியை உபயோகிக்கும் காவலர் உள்ளிட்ட நிகழ்வுகளையும் செயலியின் முகப்பு பக்கத்திலேயே காணலாம


🎯நடவடிக்கை எடுக்கப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு உறுதி செய்வதன் மூலம் தவறான எண் கொடுக்கப்படுவது தவிர்க்கப்படும். முதல் முறை நடவடிக்கை எடுக்கப்படும் போது, 1 முறை என்றும் 2வது நடவடிக்கையின் போது 2ம் முறை உங்கள் மீது நடவடிக்கை என்றும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.


காவல்துறை நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அன்போடு பேட்டிங் கொள்கிறோம்.


நன்றி- சிபி சக்ரவர்த்தி

காவல் கண்காணிப்பாளர் திருவண்ணாமலை மாவட்டம்



என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

6 views0 comments
bottom of page