நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஊரடங்கு நேரத்தில் வாகன சோதனை செய்ய புதிய “SmartCop” App அறிமுகம்...
திருநெல்வேலி அண்ணாசிலை காவல் சோதனை சாவடியில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில்
ஊரடங்கு நேரத்தில் வாகன சோதனை செய்ய புதிய “SmartCop” என்னும் App அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்
சரவணன் புதிய செயலியை அறிமுகம் செய்துவைத்தார். இந்த செயலியில் ஒரு சோதனைச்சாவடியில் வாகன எண், பெயர், ஊர், தொலைவு, பயனம் செய்யும் இடம் மற்றும் காரணம் ஆகியவை பதிவு செய்யப்படும். இதன் மூலம் எந்த ஒரு தனி நபரும் காரணம் இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் தாண்டி செல்வதும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதும் தடுக்கப்படும். மீறுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நெல்லை உதவி ஆணையர் சதீஷ்குமார், போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன், ஆய்வாளர் மீராள் பானு., உதவி ஆய்வாளர் பழனிமுருகன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்லத்துரை, உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
நெல்லை மாநகரில் இன்று 18ஆம் தேதி வரை மொத்தம் 941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 597 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.7,01,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 49 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



