சமூக இடைவெளி மற்றும் முககவசம் கட்டாயம் - பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்.







திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 26, 27 வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து உள்ளார்களா என்பது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் அவர்கள் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சமூக இடைவெளி மற்றும் முக கவசம் பயன்படுத்தாத கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மீறும் பட்சத்தில் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது... ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் உடனிருந்தார்...
News sponser : https://lapureherbals.in/
