சாரோன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கபசுர குடிநீர் முகாம் - மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு







திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் மற்றும் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேம்லா ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க 29-06-2020 முதல் 01-07-2020 வரை திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி தயாரித்து வழங்கிய கபசுர குடிநீரை சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பெருமுயற்சியால் சாரோன் நகர் குடியிருப்போர் அருகிலுள்ள உதயா நகர், அண்ணா நகர், ரோஜா நகர், முல்லை நகர், ராமவிலாஸ் நகர், என் ஜி ஓ பி காலனி ஆகிய குடியிருப்புகளில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வழங்க 29-06-2020 முதல் இன்று 01-07-2020 முடிய மூன்று நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கபசுரக் குடிநீர் துவக்க விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் அவர்கள் தலைமை ஏற்று முகாமை துவக்கி வைத்தார்கள்.
இன்றைய நிறைவு விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை ஏற்க திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேம்லா அவர்கள் முன்னிலை வகித்தார்.
சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் ஜெயபால் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். அவர் பேசுகையில் ஆணையாளர் அவர்களின் வேண்டுதலின் படி கடந்த 08-05-2020 முதல் 12-05-2020 முடிய ஐந்து நாள் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல வார்டு எண்கள்
19,26 & 27 ஆகிய பகுதிகளில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 120 பேருக்கும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் 60 பேருக்கும் ஐந்து நாள் சிறப்பு முகாம் சாரோன் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் மூலம் திருநெல்வேலி சித்த மருத்துவ கல்லூரி தயாரித்து வழங்கிய கபசுர குடிநீர் வழங்கப்பட்டது என்றும்
27-04-2020 அன்று பொது மக்கள் யாவருக்கும் சாரோன் நகர் குடியிருப்பு நல சங்கத்தின் சார்பாக ஒரு நாள் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது என்றும் குறிப்பிட்டார். மேலும் சாரோன் நகர் குடியிருப்போர் அனைவருக்கும் முகக் கவசங்கள் மற்றும் ஹோமியோபதி எதிர்ப்பு சக்தி மாத்திரை ஆர்சனிக் ஆல்பம் 30 வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். சாரோன் நகர் குடியிருப்பிற்கு சொந்தமான பூங்கா பகுதியில் நிறைந்து காணப்பட்ட முட்புதர்களை அகற்றி மண் திட்டுகளை சீர்படுத்தி நல்லதொரு நிலமாக மாற்ற மாற்றப்பட்டிருக்கிறது என்றும் இந்தப் பூங்காவில் 100 மரக்கன்றுகள் நட்டு இதனை பசுமை பூங்காவாக அமைத்து குடியிருப்பினர் அனைவரும் நடைப்பயிற்சிக்கும் சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்கும் ஏற்ற நல்லதொரு பூங்காவை அமைத்திட மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பாக அனேக பொதுநல செயல்பாடுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கிடும் அவசர குடிநீர் முகாம்களை தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சாரோன் நகர் குடியிருப்போர் அனைவருக்கும் வழங்கி வந்திருக்கிறோம் என்றும் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அருகிலுள்ள நலச்சங்க தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கொடுக்கிற ஒத்துழைப்பின் மூலம் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது என்று குறிப்பிட்டார்.
பின்னர் வாழ்த்திப் பேசிய திருநெல்வேலி பாளையங்கோட்டை வீட்டுவசதி சங்க தலைவர் முத்துக்குமார் MA,BL,MBA,PhD அவர்கள் தங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினருக்கு மூத்த குடிமக்களாகிய சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் மற்றும் தலைவர் இதர சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் எல்லோரும் மூத்த வயதினராக இருந்தாலும் இந்த வயதில் சமுதாயத்தின் மீது காட்டுகிற அக்கறை தங்களைப் போன்ற இளம் வயதினருக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுக்கிறது என்றும் சாரோன் நகர் செயலாளர் ஜெயபால் அவர்கள் காட்டுகிற அக்கறையும் அர்ப்பணிப்போம் தன்னை மிரளச் செய்கிறது என்று குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய சாரோன் நகர் குடியிருப்போர் நலச்சங்க பொருளாளரும் திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான டாக்டர்.T. கோமளவல்லி அவர்கள் கபசுரக் குடிநீரில் சேர்க்கப்பட்டுள்ள 16 வகை மூலிகைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பயன்பாடுகள் குறித்து மிக விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்கள். இந்த கபசுரக் குடிநீர் மாதத்திற்கு ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக குடித்துவர நல்லதொரு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிட முடியும் என்று தெளிவு படுத்தினார்கள்.
நிறைவாக தலைமையுரையாற்றிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் பேசுகையில் திருநெல்வேலி மாநகராட்சியில் முதல்முறையாக மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஐந்து நாட்கள் கபசுர குடிநீர் முகாம் நடத்திய பெருமை சாரோன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கும் இச்சங்கத்தில் சிறப்பாக செயல்படும் சங்கச் செயலாளர் ஜெயபால் அவர்களை பாராட்டியும் சங்கத் தலைவர் செல்வராஜ் அவர்களைப் பாராட்டியும் அதனைத்தொடர்ந்து மற்ற சங்கங்கள் இத்தகைய கபசுரக் குடிநீர் வழங்கும் முகாமை தொடர்ந்து நடத்தி வருவது தமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் பகுதியின் குளக்கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்து பல சீரிய திட்டங்களை செயல்படுத்திட உள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.
நலச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் மூத்த குடி மக்களாக இருந்தாலும் இந்த வயதிலும் சமுதாயப் பணிகளில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு சேவை மனப்பான்மை தன்னை உற்சாகப் படுத்துகிறது என்று பாராட்டிப் பேசினார்கள் பின்னர் ஷாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்க இணைச் செயலாளர் திரு எம் அன்பு தாஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நன்றி உரையில் தலைமை தாங்கி கபசுர குடிநீர் வழங்கிய ஆணையாளர் முன்னிலை வகித்த உதவி ஆணையாளர் மற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களுக்கும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்த டாக்டர். கோமளவல்லி அவர்களுக்கும் திருநெல்வேலி பாளையங்கோட்டை வீட்டுவசதி சங்கத் தலைவர் முத்துக்குமார் அவர்களுக்கும்
முகாம் நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கும் அனுமதி அளித்த கிரீன்வேஸ் அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொறுப்பாளர்களுக்கும் குறிப்பாக நமது சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தயாகரன்அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.முகாமின் துவக்க நாளன்று தலைமையேற்று முகாமை துவக்கி வைத்த திருநெல்வேலி மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் அவர்களுக்கும் முகாம் நடந்த மூன்று நாட்களுக்கும் தூய்மை பணிகளை சிறப்பாக செய்து கொடுத்த சுகாதார ஆய்வாளர் சங்கர நாராயணன் அவர்களுக்கும் நன்றி கூறினார்
இன்றைய நிறைவு விழாவில் சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்க துணைத் தலைவர் உதயகுமார் இணைச் செயலாளர்கள் அன்பர் தாஸ் மகேஷ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தின வாஸ், சட்டநாதன், டாக்டர்T. சந்திரகுமார், தயாகரன். ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதன்பின்னர் ஆணையாளர் அவர்களும் உதவி ஆணையாளர் அவர்களும் சாரம் நகர் பூங்கா பகுதியை பார்வையிட்டு பூங்காவை சுற்றிலும் வேலி அமைத்து ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை தொட்டி மற்றும் மோட்டார் பொருத்தி கொடுக்கப்படும் என்றும் கூறினார்கள்.
சங்கச் செயலாளர் பூங்காவில் இரு பக்கங்களில் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்க ஆணையாளர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களும் நீர் தொட்டியில் மேலே மின் விளக்குகள் பொருத்தி கொடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்கள்.
சங்கச் செயலாளர் ஜெயபால் அவர்கள் பூங்காவில் 100 மரக்கன்றுகள் நடப்படும் என்றும் விளக்கம் அளித்தார்கள். சங்கப் பொருளாளர் டாக்டர்.T கோமளவல்லி அவர்கள் இந்த பூங்காவில் சிறிய இடத்தில் மூலிகை பண்ணை அமைக்கலாம் என்றும் கருத்துக் கூறினார்கள்.
இன்றைய கபசுரக் குடிநீர் நிறைவுவிழாவில்
ஆறுமுகம், பெரியகுளம் பராமரிப்பு குழுத்தலைவர்.
வெள்ளையன், பெரியகுளம் பராமரிப்பு குழு செயலாளர்.
கோபாலகிருஷ்ணன், பெரியகுளம் பராமரிப்பு குழு பொருளாளர் மற்றும் ஜவஹர் நகர் நலச்சங்க தலைவர்.
நல்லபெருமாள், 27வது வார்டு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்.
சீதாராமன் ஓய்வுபெற்ற அனைத்து துறையினர் நலச்சங்க தலைவர்.
சுப்பிரமணியன், பொதிகை நடை குழு தலைவர் மற்றும் இதர நிர்வாகிகள்.
நோட்டரி பப்ளிக் திருமலையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.