சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பாக மூன்று நாள் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம்...




திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் உதவி ஆணையாளர் அவர்களின் அறிவுரையின்படி சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பாக திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி துணையுடன் சாரோன் நகர் குடியிருப்போர் அனைவருக்கும் 29-06-2020 திங்கட்கிழமை முதல் 01-07-2020 புதன்கிழமை வரை மூன்று நாள் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம் தொடக்கவிழா நடைபெற்றது. முகாமை நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். முகாமில்
சாரோன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர்
எஸ். செல்வராஜ், செயலாளர் ஜெயபால், பொருளாளர் மருத்துவர் கோமளவள்ளி, உதயகுமார், இணைச் செயலாளர்கள் மகேஷ், அன்பர்தாஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் தயாகரன், ரமேஷ்குமார், சட்டநாதன், டாக்டர். சந்திரகுமார், அனிதா, ஸ்ரீனிவாசன் சுரேஷ்குமார் , 27வது வார்டு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லபெருமாள், பெரியகுளம் பராமரிப்புக் குழு தலைவர் ஆறுமுகம், செயலாளர் வெள்ளையன், குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி வழக்கறிஞர் தம்பிதுரை,வழக்கறிஞர் திருமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் ஜெயபால் வரவேற்புரையாற்றினார்.
தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
News sponser : https://lapureherbals.in/
