மாநகராட்சி முழுவதும் ஹோமியோபதி நோய் சக்தி மாத்திரை வழங்கிய சேவாபாரதி அமைப்பிற்கு பாராட்டு சான்றிதழ்.

15.08.20 திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சேவாபாரதி அமைப்பிற்கு மாநகர ஆணையாளர் திரு .கண்ணன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள் . சேவாபாரதி சார்பாக திருநெல்வேலி மாநகராட்சி முழுவதும் கடந்த இரண்டு மாதமாக ஹோமியோபதி நோய் சக்தி மாத்திரை சுமார் 50,000 வீடுகளுக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த சேவையில் சுமார் 150க்கும் மேற்பட்ட சேவாபாரதி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . அவர்களுடைய இந்த சேவையை பாராட்டும் பொருட்டு இந்தச் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது .