top of page

சேவா பாரதி சார்பில் கோடீஸ்வரன் நகர்ப்பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரை.









திருநெல்வேலி சேவாபாரதி அமைப்பு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சாரதா ஹோமியோபதி மருத்துவ கல்லூரி ஆகியவை இணைந்து திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30c என்ற மருந்தினை இலவசமாக வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்கள். கடந்த 4ம் தேதி நெல்லையில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் மொத்தம் ஒரு லட்சம் குடும்பத்திற்கு இந்த மருந்துகளை விநியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட சேவாபாரதி அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட கோடீஸ்வரன் நகர்ப்பகுதியில் இன்று பொதுமக்களுக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 சி நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேவாபாரதி மாவட்ட பொறுப்பாளர் நிதீஷ் முருகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாலமுருகன், சுப்பிரமணியம், ஆனந்தராஜ், ஆறுமுகம், சிவா, சங்கர், மணிகண்டன். செல்வராஜ் மற்றும் கோடீஸ்வரன் நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கலந்து கொண்டனர் .









News sponser : https://lapureherbals.in/



38 views0 comments
bottom of page