சேவாபாரதி அமைப்பு சார்பில் நெல்லை மாநகராட்சி பகுயில் ஹோமியோபதி மருந்து விநியோகம்.


திருநெல்வேலி சேவாபாரதி அமைப்பு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சாரதா ஹோமியோபதி மருத்துவ கல்லூரி ஆகியவை இணைந்து திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30c என்ற மருந்தினை இலவசமாக வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்கள். கடந்த 4ம் தேதி நெல்லையில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் மொத்தம் ஒரு லட்சம் குடும்பத்திற்கு இந்த மருந்துகளை விநியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணியில் சுமார் 400க்கும் மேற்பட்ட சேவாபாரதி அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள்...
News sponser : https://lapureherbals.in/
