பேட்டையில் SDPI கட்சியின் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது





நெல்லை பேட்டையில் மாவட்ட சுகாதார அதிகாரிகளின் வேண்டுதலின் படி SDPI கட்சியின் நெல்லை தொகுதி சார்பாக மாநகராட்சி சுகாதார தூய்மை பணியாளர்களுக்கு *கபசுரக்குடிநீர்* வழங்கப்பட்டது. சுகாதார அலுவலர் அந்தோனி சாமி முன்னிலையில் நெல்லை தொகுதி தலைவர் காசிம் செயலாளர் காஜா 48வதுவார்டு தலைவர் சாகுல் மாவட்ட மருத்துவ சேவை அணி தலைவர் ஜெய்லானி செயற்குழு உறுப்பினர் ராசி சித்திக் ஆகியோர் கலந்து கொண்டு கபசுரக்குடிநீரை வழங்கினர்.இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கபசுரக்குடிநீர் சுகாதாரப்பணியாளர்களுக்கு SDPI கட்சியின் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.