top of page

பாளையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்...






கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும். மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (ஜூன்.27) தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.


பாளை நூற்றாண்டு மண்டபம் அருகே நடந்த போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் பர்கிட்

அலாவுதீன் தலைமை வகித்தார். பாளை பகுதி தலைவர் அரசன் சேக், செயலாளர் அப்துல் மஜீத், துணை தலைவர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாளை பகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.








News sponser : https://lapureherbals.in/



6 views0 comments
bottom of page