பர்கிட்மாநகரில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி







கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க பட்டு நாற்பது நாட்கள் கடந்த நிலையில் பல்வேறு தொழில்கள் முடங்கி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவான எஸ்.டி.டி.யூ சார்பாக கொரானா பாதிப்பால் வீட்டில் முடங்கியுள்ள
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் பர்கிட்மாநகரம் சுற்றுவட்டார பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி. பர்கிட்மாநகரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கிளை தலைவர் சுபைர் தலைமையில் முஹம்மது நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் ,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பர்கிட் சேக், தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் அஸ்ரப் அலி, செய்யது அலி, லாரன்ஸ், முருகன் கிளை
உறுப்பினர்கள் ஹாசிம் ,அசார், அசன்
பர்கிட்யாசின் , அலி, ஷாஹின்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.